வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (19:44 IST)

மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்த விவகாரம்: 2 பேர் மீது வழக்குப் பதிவு

salem
ஜல்லிக்கட்டு மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட வைத்து கொடுமை படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியான  நிலையில் இந்த சம்பவத்தில் காளையை துன்புறுத்தியதாக ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில்,ஜல்லிக்கட்டு  மாட்டின் வாயில் உயிரோடு உள்ள கோழியை திணித்து சாப்பிட் வைத்து கொடுமை படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் காளை என்று தெரியவந்தது. எனவே இந்த சம்பவத்தில் காளையை துன்புறுத்தியதாக ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.