போலி செய்தியை பரப்பிய முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு!
முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ் ஆப் குழுக்களில் முதல்வர் மற்றும் தமிழக அரசு பற்றி போலி செய்திகள் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் அதிகாரி நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், வதந்தி பரப்பியதாக முன்னாள் எம்.எல்.ஏ நட்ராஜ் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக போலி செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நடராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.