1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (18:24 IST)

ஒவ்வொரு வீட்டிற்கும் கார், விண்வெளி பயணம்,பனிமலை - சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதி

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அனுப்பானடியில் வசித்துவரும் துலாம்சரவணனன்(34) என்பவர் மதுரை தெற்குத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் நிலையில் சாத்தியமே இல்லாத கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

அதில், தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குளம்வசதியுடன் 3 மாடி வீடு, ஒவ்வொருவீட்டிற்கும் கார், இளைப்பாற 300 அடி உயரத்தில் ஒரு செயற்கை பனிமலை,பெண்களிந்திருமணத்திற்கு 100 சவரன் நகை இல்லத்தரசிகளுக்கு ரோபோ வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,                                 மக்களுக்குஇலவசங்கள் மீது எச்சரிக்கை உணவு ஏற்படவேண்டுமென்பதற்குத்தான் இதை தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.