1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (09:11 IST)

சிஏஏ போராட்டத்தை காலி செய்த கொரோனா வைரஸ் பீதி!

சென்னை வண்ணாரப்பேட்டை நடைபெற்று வந்த சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 
 
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்று வந்தது. இந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆம், நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில் அரசு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் என வலியுறுத்தி வருகிறது. எனவே, நலனை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருப்பத்தூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் நடைப்பெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.