வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (13:27 IST)

ஓ.பி.எஸ் தொகுதியில் இடைத்தேர்தல்.. டி.டி.வி.தினகரன் போட்டி?

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலா தரப்பில் முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டசபையில் கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிந்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கட்சி கொறடா ராஜேந்திரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.  
 
அதேபோல், ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவிற்கு மீறி செயல்பட்டதால்  அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், தேனி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய சில எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ-வாக உள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரும். அந்த தொகுதியில் தற்போதைய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நின்று வெற்றி பெறுவார்” எனப் பேசினார்கள்.