வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (11:36 IST)

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

மாடுகளை தெருவில் மேய விடக்கூடாது என்றும் மாடுகளால் மனிதர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு என்றும் ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரிக்கை செய்தும் இன்னும் பல இடங்களில் சாலைகளில் தான் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு ஒன்று திடீரென தெருக்களில் ஓடி இருசக்கர வாகனங்களையும் இடித்துக் கொண்டு சென்றதாகவும் அப்போது ஒரு இளம் பெண்ணை தரதர என சாலையில் இழுத்துக் கொண்டு சென்ற போது அந்த பெண் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் அந்த பெண்ணை காப்பாற்ற சென்ற சிலருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. எருமை மாட்டை யாரோ சிலர் விரட்டிய நிலையில் அந்த ஆத்திரத்தில் எருமை மாடு வேகமாக ஓடியதாகவும் அதன் காரணமாகத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்து தகவல் கொடுத்தும், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
 
Edited by Mahendran