வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (19:47 IST)

''மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்''- நடிகர் விஜயகாந்த்

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் முக.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அதன்பின்னர், திமுக அரசு 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்த  நிலையில், இன்று 3 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள சட்டசபையில்,   காலை,தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். . முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறிய அமளி செய்ததை அடுத்து சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தனர்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி  திமுக அரசின் 3 -வது பட்ஜெட் மக்களை  ஏமாற்றுகிற பட்ஜெட் என்று கூறினார்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத தமிழக பட்ஜெட் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வமான எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் உரிமை தொகை வழங்கப்படும் என சொல்வது எந்த வகையில் நியாயம்.

நிதி நிலை அறிக்கையில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காதது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, தொழிற்சாலைகள் அமைப்பது, சிறு குறு தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு, வறுமையை ஒழிப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது;; என்று தெரிவித்துள்ளார்.