வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:59 IST)

திருமணம் நடைபெற சிலமணி நேரத்திற்கு முன் மாப்பிள்ளை மர்ம மரணம்: உறவினர்கள் போராட்டம்!

dead
திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் புது மாப்பிள்ளை மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது 
 
ஆனால் ஜெகதீஷ் ஓட்டிச்சென்ற வாகனத்திற்கு எந்தவித சேதமும் இல்லாததால் ஜெகதீஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்
 
மேலும் இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெகதீஷின் உறவினர்கள் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்