1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 3 ஜூன் 2015 (15:57 IST)

இந்திய மருத்துவ உலகில் முதன் முறையாக: மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இதயமும், கல்லீரலும்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயமும் கல்லீரலும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சம்பந்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
 
மதுரை அருகே தாமோதரன் என்ற நபர் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிசைக்காக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவருக்கு இன்று காலை மூளைச்சாவு ஏற்பட்டது என டாக்டர்கள் அறிவித்தனர். 
 
இதனையடுத்து, தாமோதரனின் இதயம், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புக்களை தானமாக கொடுக்க உறவினர்கள் முன்வந்தனர்.
 
இதனையடுத்து, தாமோதரனின் இதயம் மற்றும் கல்லீரல்  ஆகியவற்றை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது.
 
இதனையடுத்து, தாமோதரனின் இதயம் மற்றும் கல்லீரல்  ஆகியவற்றை, கிரீன்காரிடர் முறையில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. 
 
மதுரையில் இருந்து பகல் 12.55 மணிக்கு இதயமும், இதனையடுத்து, பகல் 1.05 மணிக்கு கல்லீரலும், விமானம் மூலம் சென்னைக்கு  கொண்டு செல்லப்பட்டு, அங்கு சம்பந்தப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
 
ஒரு மனிதன் மூளை மற்றும் கல்லீரல் போன்றவற்றை மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு சென்று பொறுத்தப்பட்டது, இந்திய மருத்துவ உலகில் முதல்முறையாகும்.