வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2024 (08:26 IST)

பிராமணர்கள் பாதுகாப்பாதான் இருக்காங்க..! இனி கஸ்தூரிய நினைச்சாதான்..! - எஸ்.வி.சேகர் கொடுத்த அட்வைஸ்!

Kasthuri

தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடிகை கஸ்தூரி பேசியதற்கு எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையான நிலையில் அவர் வருத்தம் தெரிவித்தார். எனினும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தில் பிராமணர்கள் பாதுகாப்பாக இல்லை என கஸ்தூரி பேசியது தவறு என எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்வது தவறு. தமிழகத்தில் 10 கோடி மக்கள் உள்ளனர். சில குடும்பங்களில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்கின்றனர். அதற்காக தமிழகம் முழுவதும் அப்படி நடக்கிறது என சொல்ல முடியுமா?

 

எங்கோ ஒரு இடத்தில் நடப்பதை பொதுப்படையாக்க முயற்சிக்க கூடாது. சில மாதங்களுக்கு முன்பு இனப்படுகொலை என்ற வார்த்தையை அண்ணாமலை பேசியிருந்தார். அதனால் தானும் அவ்வாறு ஏதாவது பேசினால் பாஜகவில் அண்ணாமலை தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என நினைத்து கஸ்தூரி அப்படி பேசியுள்ளார்.

 

ஆனால் தமிழக பாஜகவில் அனைத்து கதவுகளும் கஸ்தூரிக்கு மூடப்பட்டுவிட்டது. ஆந்திராவிலும் அவர் மீது வழக்கு இருக்கிறது. இனி கஸ்தூரி தனி கட்சி ஆரம்பித்து இதுபோல பேசிக் கொள்ள வேண்டியதுதான்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K