1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (15:34 IST)

சிறுமியை கடத்தி திருமணம் செய்த 20 வயது பையன்: பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த 20 வயது பையன்: பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை 20 வயது இளைஞன் ஒருவன் தனது குடும்பத்தினரின் உதவியுடன் கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
காஞ்சிபுரம் மதுராந்தகம் அருகே உள்ள நட்ராம்பக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்டனின் மகள் 16 வயதான சாந்தியை அந்த பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் 20 வயதான பிரேம் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறுமி சாந்தி செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பிரேம் குமாரும் அவரது உறவினர் 27 வயதான சரவணனும் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி சாந்தியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இதற்கு பிரேம் குமாரின் தந்தை ராமு மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமி சாந்தி இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமு, பிரேம் குமார், சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.