1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (11:30 IST)

60 நாட்கள் உல்லாசத்தில் புளித்துப்போன காதலி.. காவல் வலையில் காதலன்!!

சென்னையில் காதலியை ஏமாற்றிய காதலனை போலீஸார் கை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வியாசர்பாடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  அந்த இளைஞரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து தாயை பார்த்துக்கொள்ளும் படி கூறியுள்ளார். 
 
காதலானின் பேச்சை தட்டாமல் அந்த இளம்பெண்ணும் இரண்டு மாதம் காதலன் வீட்டில் இருந்து தாயை கவனித்துக்கொண்டிருந்துள்ளார். இந்த இரண்டு மாதங்களில் பலமுறை காதலனின் ஆசைக்கும் இணங்கியுள்ளார். பல முறை உல்லாசத்தால் காதலி மீது ஆசை போனதும் அவரை கழற்றி விடும் முயற்சிகளில் அந்த இளைஞர் ஈடுப்பட்டுள்ளார். 
 
இதனை உணர்ந்துக்கொண்ட காதலி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காதலனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.