வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (00:30 IST)

அமைச்சர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம் முடிந்தது: முக்கிய முடிவுகள் என்ன?

சென்னையில் சற்று முன்னர்  அமைச்சர்கள் தங்கமணி மற்றும் உடுமலை ராதகிருஷ்ணன் இல்லத்தில் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில் சற்று முன்னர் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.



 


இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக கட்சியை ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்தும், தேர்தல் ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை செய்யவே இந்த கூட்டம் நடைபெற்றது. இது ஒரு ரகசிய கூட்டம் இல்லை. அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக ஆலோசனை செய்தோம். மேலும் ஓபிஎஸ் கருத்தையொட்டி இரு அணிகளும் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவது குறித்தும் நாங்கள்ஆலோசித்தோம்' என்று கூறினார்.

எனவே இரு அணிகளும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்வார் என்றும் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது