1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (12:59 IST)

மறக்க முடியுமா கொடுமைகள் பற்றி வீடியோவில் பேசாதது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புளூசட்டை மாறன் கேள்வி

பலமுறை இன்ஸ்டாகிராமில் லைவாக வீடியோவில் பேசும் ரஹ்மான் இந்த மறக்க முடியுமா கொடுமைகள் பற்றி வீடியோவில் பேசாதது ஏன்? என புளூசட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பெண் ஒருவரின் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அந்த பெண் கூறியதாவது:
 
மேலும்  இயற்கை உபாதை கழிக்க இடம் எங்குள்ளது, எப்படி செல்ல வேண்டுமென எவ்வித பதாகையோ, மைக் மூலமாக அறிவிப்போ இல்லை. பெண்கள் மிகவும் அவஸ்தைப்பட்டோம். இனி இசை நிகழ்ச்சிக்கு போகும் எண்ணம் வருமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் வீடியோவை பதிவு செய்த புளூசட்டை மாறன் கூறியதாவது:
 
பணத்தை திரும்ப பெறுதல் இரண்டாம் பட்சம். நாங்கள் பட்ட வலியை மறக்க இயலாது. ரஹ்மான் உண்மையாகவே அன்பை விதைப்பவர். Humanity, Accountabiliy உள்ளிட்ட உயர் பண்புகளை கொண்டவராக இருந்தால்.. இவ்விரு பெண்களையும் தொடர்பு கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும்.
 
அதற்கு நேரமில்லாத அளவு பிசியாக இருந்தால்... இப்பெண்மணி சொன்னது போல இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் வீடியோ மூலம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
 
ரெண்டு ட்வீட் மற்றும் தி ஹிந்துவிற்கு ஒத்தை பேட்டி மட்டும் தந்தால் போதாது.
 
இது பாதிக்கப்பட்ட பெண்கள்... ரஹ்மானிடம் நடத்தும் உரையாடல்.
 
ஆகவே பருத்தி வீரர் கார்த்தி, விருது வித்தகர் பார்த்தி இத்யாதிகள் எல்லாம் இவர்களுக்காக பேசுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் வேலையை பாருங்கள்.
 
Refund, Compliment, Surprise எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ரஹ்மான். நீங்கள் உண்மையிலேயே பெண்களை மதிப்பவராக இருந்தால்.. அவர்கள் சந்தித்த கொடுமைகளுக்கு பதில் சொல்லும் விதமாக ஒரு வீடியோ போடுங்கள். வீடியோ மூலம் உங்கள் பதிலை கேட்க விரும்புவதும் அவர்கள்தான்.
 
நியாயமான கேள்வி கேட்போரை வன்ம நக்கி, காழ்ப்புணர்வு கக்கி என்று எகத்தாளம் செய்பவர்கள்... தயவு செய்து கூப்பில் உட்காரவும்.
 
இளையராஜாவை கேள்வி கேட்டால் உபி. ரஹ்மானை கேள்வி கேட்டால் சங்கியா எனவும் புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran