ஸ்விகி சப்ளை செய்த நூடுல்ஸில் ரத்தக்கரை பேண்டேஜ்: அதிர்ச்சி தகவல்

Last Modified திங்கள், 11 பிப்ரவரி 2019 (21:57 IST)
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் மூலம் உணவுபொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கென ஒருசில் நிறுவனங்கள் இரவு பகலாக சேவை செய்து வருகின்றன
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஸ்வகியில் ஒரு புகழ்பெற்ற் ஓட்டலின் நூடுல்ஸை ஆர்டர் செய்தார். இந்த நூடுல்ஸ் டெலிவரி செய்யப்பட்டதும் ஆசையுடன் சாப்பிட தொடங்கிய பாலமுருகன், அந்த நூடுல்ஸில் ரத்தக்கரையுடன் கூடிய ஒரு பேண்டேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்த பாலமுருகன், ஸ்வகி நிறுவனத்திடம் புகார் செய்தார்.
இந்த புகாருக்கு பதிலளித்த சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம், 'உணவுப்பொருளை பேக்கிங் செய்யும் நபருக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்ததால், அந்த காயத்திற்கு போடப்பட்ட பேண்டேஜ் உணவில் கலந்துவிட்டதாகவும் இனியொருமுறை இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும் என்றும் பதிலளித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :