வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (14:41 IST)

பாமகவினர் கற்களை வீசித் தாக்கியதில் போலீஸார் மண்டை உடைப்பு

neiveli
கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை  கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்து வருகிறது.  

ஒருசில பாமகவினர்  உள்ளே செல்ல முயன்றபோது, போலீசின்  தடுப்பை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் பாமகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

காவல்துறையினர் மற்றும் பாமகவினர் இடையே மாறி மாறி கற்கள் வீசித் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தடியடி  நடந்து வருகிறது. இதில், ஒரு போலீஸ் காரரின் மண்டை உடைந்தது. அவரை சக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே இப்போராட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லும்போதும், வஜ்ரா வாகத்தின் மீதும் அந்த வாகனத்தின் மீது பாமகவினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர்.

பாமகவினரின் முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த இடம் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகிறது.