வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (19:33 IST)

பாஜக ஒட்டிய பிரதமர் படத்தின் மீது கருப்பு ஸ்ப்ரே: தந்தை திராவிடர் கழகத்தினரால் பரபரப்பு

black spray
பாஜக ஒட்டிய பிரதமர் படத்தின் மீது கருப்பு ஸ்ப்ரே: தந்தை திராவிடர் கழகத்தினரால் பரபரப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போஸ்டர்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாததால் இன்று காலை பாஜகவினர் அந்த போஸ்டரில் பிரதமரின் படத்தை ஒட்டினர். இந்த நிலையில் பிரதமர் படத்தின் மீது தந்தை திராவிட கழகத்தினர் கருப்பு ஸ்ப்ரேயை அடித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதை அடுத்து பிரதமர் மோடியின் படம் செஸ் விளையாட்டு போட்டியில் எந்த போஸ்டர் இல்லை என்று அதிருப்தி பாஜகவினர் இடையே இருந்தது
 
 இதனை அடுத்து இன்று காலை பாஜகவினர் செஸ் விளையாட்டு போட்டியின் போஸ்டரில் பிரதமரின் படத்தை ஓட்டினர். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் படத்தின் மீது கருப்பு ஸ்ப்ரே அடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது