செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (17:47 IST)

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜகவினர்: கூட்டணி அவ்வளவுதானா?

கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக பாஜகவில் உள்ள பிரபலங்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் மற்றும் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அதிமுகவின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணியினரின் இந்த செயல் அதிமுக பாஜக கூட்டணியின் உறவை முறித்துக் கொண்டதாகவே கூறப்படுகிறது
 
Edited by Mahendran