Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

’பாஜக நல்ல பெயர் எடுக்க நினைத்ததை அதிமுக கெடுத்தது’: விஜயகாந்த் பளீர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:21 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் தமிழக அரசு முந்திக் கொண்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவகொழுந்து இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டி பின்வருமாறு:

மத்திய பட்ஜெடை தமிழக அரசு வரவேற்று உள்ளதே?

அவர் வரவேற்க தான் செய்வார். இந்த பட்ஜெட்டில் நல்லதும் இருக்கிறது. கெடுதலும் இருக்கிறது. இரண்டும் கலந்து தான் இருக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு எப்படி இருந்தது?

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் தமிழக அரசு முந்திக்கொண்டது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுவி இருகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளனர்?

தமிழக அரசு மத்திய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு சொல்லுகிறார்களா? இல்லை, மத்திய அரசிடம் இருந்து தப்பிக்க இது போன்று சொல்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

ஒசாமா பின்லேடன் படம் இருந்ததாக முதலமைச்சர் கூறியுள்ளாரே?

அப்படி எல்லாம் இல்லை. அப்படி எதுவும் வாட்ஸ் அப்பில் வரவில்லையே.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :