திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (23:01 IST)

இளைஞரணி செயலாளருக்கு இளைஞரணி தலைவர் விடுத்த சவால்!

திமுகவின் இளைஞரணி செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார். இந்த சவாலை உதயநிதி ஏற்பாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
 
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பலவிதமாக கருத்தை கூறிக்கொண்டிருந்தாலும் இதுகுறித்து எந்தவித கவலையும் இன்று திமுகவினர் உதயநிதியை கொண்டாடி வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் என்பவர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு அவரை விவாத்திற்கும் அழைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். களப்பணியில் பாஜக இளைஞரணி Vs திமுக இளைஞரணி என்னும் தலைப்பில் உங்களோடு விவாதிக்க ஆவலாக இருக்கிறேன். எங்கே, எப்போது என்பதை எனக்கு தயவு செய்து தெரியப்படுத்துங்கள்" என கூறியுள்ளார். இந்த சவாலை உதயநிதி ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்