ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 30 ஜூன் 2021 (22:24 IST)

புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? பாஜக பிரமுகர் கேள்வி

புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? பாஜக பிரமுகர் கேள்வி
புதிய தலைமுறை டிவிக்கு திமுக மீது ஏன் வன்மம் என்று தனது டுவிட்டரில் பாஜக பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
புதிய தலைமுறை சமூக வலைதளப் பக்கத்தில் திருவாரூரில் உள்ள ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் பல ஆண்டுகளாக கிராம மக்கள் அவதியுடன் இருக்கிறார்கள் என்பது குறித்த செய்தியை பதிவு செய்துள்ளது 
 
இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் எம்எல்ஏவாக திமுக தலைவர் கருணாநிதி தான் பல ஆண்டுகளாக இருந்தார் என்றும் அவரது தொகுதியில் தான் இந்த அவல நிலை என்றும் கூறிய பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர் புதிய தலைமுறைக்கு ஏன் திமுக மீது வன்மம்? என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
ஒரு ஆற்றங்கரையை
கடக்க
பல்லாண்டுகளாக
பாலம் இல்லை.
யார் அந்த தொகுதி MLA ?
திமுக
கொஞ்சம் காலம்
கலைஞர் MLA
புதிய தலைமுறைக்கு ஏன்
திமுக மீது வன்மம்?
அவங்க முதலாளியே
திமுக MP
காரணம் புரியலியே