அரசியலில் திடீர் திருப்பம்: அதிமுகவுக்கு பாஜக ஆதரவு!
நெல்லித்தொகுதி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், திடீரென அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். நெல்லித்தோப்பு தொகுதியில், என்.ஆர்.காங்கிரசுடன் இணைந்து போட்டியிட பாஜக பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
ஆனால், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்போது பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
முதல்வரும், நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமியை தோற்கடிக்கவே இந்த முடிவை தாங்கள் எடுத்திருப்பதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.