இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்..பாஜகவினர் பேரணி
தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகின்றனர் என கூறி கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
ஒரு புறம் சிஏஏவிற்கு எதிராக பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் பாஜகவினர் சிஏஏவை ஆதரித்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லியில் இரு தரப்பினரிடையே வெடித்த வன்முறையில் 35 பேர் பலியாகினர். மேலும் இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும் நொறுக்கப்பட்டது.
அதே போல் தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக் கூறி கண்டனம் தெரிவித்து பாஜகவினர் பேரணி நடத்தினர்.