1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (17:33 IST)

ஆ ராசாவை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தாது: அண்ணாமலை

annamalai
ஆ ராசாவை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தாது என்றும் அதற்கு பதிலாக கையெழுத்து இயக்கம் நடத்தும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக எம்பி ஆ ராசா, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
ஆனால் அதே நேரத்தில் தான் பேசியது சரிதான் என்று மீண்டும் மீண்டும் ஆ ராசா கூறிவருகிறார். இந்த நிலையில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராசாவை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தாது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் போன்ற எம்பி மக்களிடையே வேண்டாமென கையெழுத்து இயக்கம் மட்டுமே நடத்துவோம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.