வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (17:06 IST)

’தாமரை மலர்ந்தது’: எம்ஜிஆர், ரஜினி படங்களுடன் போஸ்டர்கள்!

’தாமரை மலர்ந்தது’: எம்ஜிஆர், ரஜினி படங்களுடன் போஸ்டர்கள்!
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது என போஸ்டர்கள் ஒட்டிய பாஜகவினர் அதில் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் புகைப்படங்களை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக அபிமானிகள் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் தாமரை மலர்ந்தது என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் உள்ளது 
 
அது மட்டும் இருந்தால் பரவாயில்லை, அதில் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் புகைப்படமும் உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று உறுதியாகச் சொன்ன பின்னரும், எம்ஜிஆருக்கும் பாஜகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றபோதிலும் ரஜினிகாந்த் மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை அந்த போஸ்டரில் பாஜகவினர் பயன்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது