Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமலின் கடுமையால் பாதிக்கப்படும் விஜய் டிவி: பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த பொன்னார் வலியுறுத்தல்!

கமலின் கடுமையால் பாதிக்கப்படும் விஜய் டிவி: பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த பொன்னார் வலியுறுத்தல்!

Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (13:08 IST)

Widgets Magazine

நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் மக்களின் அமோக ஆதரவால் அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.


 
 
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வலியுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த கூறியிருப்பது விஜய் டிவிக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. இதற்கு காரணமும் கமல் என்றே கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கமலை பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா போன்றோர் விமர்சித்து வருகின்றனர். கமலும் அவர்களது விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல் கொஞ்சம் கடுமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்துகொண்டது பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்னவோ.
 
விஜய் தொலைக்காட்சியையும் அந்த நிகழ்ச்சியில் கடுமையாக சாடினார் கமல். தொடர்ந்து காயத்ரி ரகுராமிடம் பேசும்போது வட இந்தியா வேறு தமிழகம் வேறு, இது வேற இந்தியா என்றார். அதாவது தமிழகத்தை தனி இந்தியாவாக கமல் சுட்டிக்காட்டியது  பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
மேலும் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு குறிப்பாக தென்னிந்தியாவில் சுயமரியாதை சற்று அதிகம் எனக் கூறினார். இந்த பரபரப்புக்கு பின்னர்தான் பாஜகவின் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்திற்கும் நல்லது என்று கூறியுள்ளார். கமல் சற்று கடுமையாக நடந்து கொண்டது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி: சென்னையில் பரபரப்பு!

சென்னை மடிப்பாக்கம் அருகே காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் ...

news

திருமணத்துக்கு மறுத்த அக்கா மகளை கத்தியால் குத்திய மாமன்!

திருச்சி அருகே திருமணம் செய்ய மறுத்ததால் தனது சொந்த அக்கா மகளை மாமன் கத்தியால் குத்திய ...

news

பயணிகளிடம் வழிப்பறி செய்த போலீசார் - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம், ரெயில்வே போலீசார் 3 பேர் வழிப்பறி ...

news

உல்லாசமாக உடலுறவு செய்துவிட்டு சக மாணவனை மாட்டிவிட்ட மாணவியை சிக்க வைத்த வீடியோ!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் விருப்பப்பட்டு இந்திய இளைஞர் ஒருவருடன் உடலுறவு செய்துவிட்டு ...

Widgets Magazine Widgets Magazine