வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (06:02 IST)

அதிமுக குளோஸ்: அடுத்த டார்கெட் திமுக! பாஜகவின் பலே பிளான்

ஒருவழியாக அதிமுகவை பாஜக தலைமை கலைத்துவிட்டது. சசிகலா சிறை சென்றுவிட்டார், ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தி தினகரன் தலையெடுப்பதையும் தடுத்தாகிவிட்டது. அடுத்து ஃபெரா வழக்கை வைத்து தினகரனை சாய்த்துவிட்டால், அதன்பிறகு அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது அவ்வளவு பெரிய வேலை இல்லை. ஓபிஎஸ் எப்படியும் பாஜக ஆதரவாளராகத்தான் இருப்பார். தீபாவின் செல்வாக்கு நாடே அறிந்ததுதான்.


 


இந்நிலையில் பாஜக தமிழகத்தில் காலூன்ற தற்போது இருக்கும் ஒரே தடை வலுவான, கட்டுக்குலையாமல் இருக்கும் திமுகதான். இந்த நிலையில்தான் தி.மு.க-வில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரை, கடந்த மாதம் நாக்பூரில் வைத்து பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் சந்தித்து அவர்களை மனதை மாற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

தி.மு.க-வை உடைப்பதற்கு அவர்களிடம் பேரங்கள் பேசப்பட்டுவிட்டதாகவும் இந்தச் சந்திப்பில் தி.மு.க-வில் இருந்து 7 பேர் கலந்துகொண்டதாகவும், இவர்கள் பெரும்பாலும் அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் அழகிரியின் ஆதரவாளராக உள்ள ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றொரு வி.ஐ.பி., டெல்லி பாஜக மேலிட பிரமுகர்களோடு நெருக்கமான நட்பில் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது. விரைவில் திமுகவில் சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வட மாநிலங்களை போல தென்மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறப்படுகிறத்ஜு.