டிசி இல்லாமல் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்தது எப்படி? அன்பில் மகேஷூக்கு பாஜக கேள்வி..!
இந்த ஆண்டு சுமார் 50,000 மாணவர்கள் பொது தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியான நிலையில் பொது தேர்வு எழுதாத மாணவர்களில் சிலர் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள் என்றும் அந்த மாணவர்களை கழித்தால் மட்டுமே உண்மையில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தெரிய வரும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் .இதற்கு பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது
புதிய கதை! அப்படியானால், மாற்றுச் சான்றிதழ் (TC) பெறாமல் ஐ டி ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு விசாரணை நடத்த உத்தரவிடுமா தமிழக அரசு? அப்படி சேர்த்த கல்லூரிகள் தகுதி நீக்கம் செய்யப்படுமா? அவை அரசு கல்லூரிகளாக இருந்தால் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி
அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பீர்களா?
மாணவர்களின் பெயரில் அரசின் சலுகைகள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வீர்களா?
அமைச்சர் பொன்முடிக்கு இப்படி ஒரு 'செக்' வைதது விட்டீர்களே அன்பில் மகேஷ் அவர்களே? மாணவர்களின் பெயரில் அரசின் சலுகைகள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வீர்களா?
அமைச்சர் பொன்முடிக்கு இப்படி ஒரு 'செக்' வைதது விட்டீர்களே அன்பில் மகேஷ் அவர்களே?
Edited by Siva