செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (22:44 IST)

இந்தி மொழி குறித்து பேசிய திமுக எம்பிக்கு நாராயணன் திருப்பதி பதிலடி!

tirupathi
முன்னேறாத மாநிலங்களின் மொழி 'ஹிந்தி என்றும், ஹிந்தியை பின்பற்றினால் 'சூத்திரர்களாகி' விடுவோம் என்றும் திமுக டி கே எஸ் இளங்கோவன் பேசிய நிலையில் இதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளர. அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
மொழி அரசியல் செய்து வந்த தி மு க மொழியோடு சாதியை இணைத்து அரசியல் செய்ய முனைவது பிரிவினை கருத்துகளை விதைப்பதற்கே. 
 
நீதிக்கட்சியின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டி கொள்ளும் தி மு க இந்த பேச்சின் மூலம் தாங்கள் 'தலித்' மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. 
 
ஒரு வருட  ஆட்சியின் அவலத்தை மூடி மறைக்க, மொழியால், சாதியால் மக்களை தூண்டி விட்டு இந்தியாவை பிளக்க நினைக்கும் தி மு கவின் முயற்சி முறியடிக்கப்படும்