திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (12:26 IST)

ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறு?!- பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை!

தூத்துக்குடியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை சேர்ந்தவர் தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவரின் மகன் இசக்கி என்பவருக்கு ஆடு மேய்ச்சல் விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தாஸ் தென்கரை அருகே உள்ள தேநீர் கடையி டீ அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இசக்கி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இசக்கியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.