செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (09:28 IST)

இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக: மெஜாரிட்டியை விட முன்னிலை!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு வரும் நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்துவிடும் என கருதப்படுகிறது
 
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 253 தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளிவந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி 161 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 தொகுதிகள் இருந்தால் போதும். எனவே மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 76 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் என கருதப்படுகிறது
 
அதேபோல் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் கட்சியும் 33 தொகுதிகளில் முன்னணியில் உள்ளதால் இம்மாநிலத்தில் இழுபறி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் ஹரியானாவில் 13 தொகுதிகளில் பிற கட்சியினர் முன்னிலையில் இருப்பதால் அவர்களுடைய ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது