திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (15:32 IST)

பாஜக பிரமுகரான பெண் தாதா கைது !!

நாகூர் மெயின் ரோட்டில் வைத்து,பாஜக பிரமுகரான பெண் தாதாவை போலீஸார் கைது செய்தனர்.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தமிழகம்  முழுவதும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தங்கள் கட்சித் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் அக்கட்சி வெளியிட்ட நிலையில்  அகட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு குற்றவழக்குகளில்  தேடப்பட்டுவந்த பெண் தாதா எழிலரசியை நாகூர் மெயின் ரோட்டில் வைத்து காரைக்கால் போலீஸார் கைது செய்தனர்.

இத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.