Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிக்கலில் அதிமுக? முடங்கும் இரட்டை இலை சின்னம்?: பதற்றத்தில் வைகை செல்வன்!

சிக்கலில் அதிமுக? முடங்கும் இரட்டை இலை சின்னம்?: பதற்றத்தில் வைகை செல்வன்!


Caston| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:04 IST)
இரட்டை இலையை முடக்க முயற்சி செய்வதாக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பகிரங்கமாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 
 
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம், இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு உரிமை என்ற பஞ்சாயத்து தேர்தல் ஆணையத்தில் உள்ளது. இதில் இரு அணிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வரும் 22-ஆம் தேதியை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
 
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கட்சியினர் பேசி வருகின்றனர். இதனையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பாஜகவின் தமிழிசை, எச்.ராஜா போன்றோர் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறி வருவதை பார்த்தால், பாஜக இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி செய்து வருவதாக தோன்றுகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
வைகை செல்வனின் இந்த அறிக்கையை பார்த்தால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது. அவருக்கு இரட்டை இலை சின்னம் முடங்குவதாக தகவல் கிடைத்திருக்கும் அதனால் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :