Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (10:31 IST)
முடங்குகிறது இரட்டை இலை. அதிர்ச்சியில் தினகரன். உற்சாகத்தில் ஓபிஎஸ்
அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளுமே கேட்பதால் யாருக்கு இரட்டை இலை என்ற முடிவை வரும் 22ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் இருந்து கசிந்து வந்த தகவலின்படி இரட்டை இலை சின்னம் முடங்க போவதாக செய்திகள் வந்துள்ளதாம்
இந்த தகவல் சசிகலா அதிமுகவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிடிவி தினகரனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாததால் சின்னத்தை வைத்துதான் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்தது.
புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தி வெற்றி பெறுவது என்பது மிகக்கடினமான ஒன்று என்பதால் தினகரன் குரூப் அதிர்ச்சியில் உள்ளது.
ஆனால் ஓபிஎஸ் அணியினர் இதனால் உற்சாகமாக உள்ளார்களாம். தினகரன் ஜெயிக்க கூடாது என்பது மட்டுமே ஓபிஎஸ் அணியின் இப்போதைய அசைன்மெண்ட்டாம். இரட்டை இல்லை என்றால் தினகரன் வெற்றி பெற முடியாது என்பது தற்போது உ'றுதியாகியுள்ளதால் அந்த அணி தற்போது உற்சாகத்தின் எல்லையில் உள்ளதாம்