ஐ.எஸ் அமைப்பின் பயங்கரவாத நகரமாகிறது கோவை..? – அண்ணாமலை விமர்சனம்!
கோவையில் கார் வெடித்த விபத்து குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கோவையில் கார் வெடித்து முபீன் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது தீவிரவாத சதி செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கோவை சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விமர்சித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் இலக்காக மாறி வருவதாக கூறியுள்ளார். மேலும் காவல்துறை சில விஷயங்களை மக்களிடம் மறைப்பதாக கூறியுள்ள அவர், இதுகுறித்து தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Edited By Prasanth.K