1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:35 IST)

ஆளுனர் கே.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு: நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

தமிழக ஆளுநராக சமீபத்தில் பதவியேற்ற கே.என் ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மூத்த தலைவர்களுடன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பாஜக மூத்த தலைவர்களுடன் இன்று மேதகு ஆளுநர் திரு.ரவி அவர்களை நேரில் சந்தித்தேன்! 
 
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேதகு ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தோம்!