செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 அக்டோபர் 2020 (08:28 IST)

எம்.ஜி.ஆரையும் பாஜகவுக்கு தூக்கி குடுத்துட்டீங்களா?? - பாஜக விளம்பரத்தில் எம்ஜிஆர் படம்!

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பாஜக தங்களது விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக – பாஜக மக்களைவைக்காக கூட்டணியில் உள்ள நிலையில், சட்டசபையிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக நடத்தவுள்ள வேல்யாத்திரைக்கு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பொன்மன செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா” என்ற வரிகளுடன் எம்.ஜி.ஆர் படமும் பிறகு மோடி படமும் வரும்படி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் “அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால் அதற்காக பிற கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதிமுக தற்போது எம்.ஜி.ஆரையும் விட்டுக்கொடுத்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.