வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 25 நவம்பர் 2014 (16:21 IST)

நான் பாஜகவில் இணைவதாக சொல்லப்படுவது உண்மை இல்லை: நடிகை குஷ்பு விளக்கம்

நடிகை குஷ்பு பாஜகவில் இணைவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில், அந்தச் செய்தி அடிப்படை உண்மையற்றது என்று அவர் கூறியுள்ளார்.
 
நடிகை குஷ்பு திமுக வில் முக்கிய பேச்சாளராக விளங்கினார். இந்நிலையில் அவர் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார். 
 
இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகின. சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து செய்திகள் வெளியாயின.
 
ஆனால் இதை, நடிகை குஷ்பு மறுத்துள்ளார். இது குறித்து ட்டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘பாஜகவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை‘ என்று தெரிவித்துள்ளார்.