வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (13:46 IST)

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: தலைமைச் செயலாளர் உடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை!

iraiyanbu
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: தலைமைச் செயலாளர் உடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை!
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கிளப்பப்பட்ட வதந்தியை விசாரிக்கும் வகையில் பீகார் குழு ஒன்று தமிழகம் வந்தது என்பதும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த குழுவினர் விசாரித்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் பீகாரியிலிருந்து வந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுடன் பீகார் அதிகாரிகளுக்கு தற்போது ஆலோசனை செய்து வருகின்றனர் 
 
குழந்தை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது என இறையன்புவை சந்தித்த பிறகு பீகார் அதிகாரிகள் குழு பேட்டி அளித்துள்ளனர். பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும்  பீகார் குழுவினர் தெரிவித்தார்.
 
Edited by Siva