1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (18:43 IST)

ராஜகோபாலன் போன்றவர்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்: பிக்பாஸ் பிரபலம் டுவிட்!

ஆசிரியர் ராஜகோபாலன் போன்றவர்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டுமென பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்
 
குறிப்பாக விஷால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்களை தூக்கில் போடவேண்டும் என்று நடிகர் விஷால் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஆரி, இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஆசிரியர் போர்வையில்
பள்ளி குழந்தைகளுக்கு   
பாலியல் துன்புறுத்தல்கள்   செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி 
எடுக்கும் நடவடிக்கை 
இது போன்றோருக்கு 
பாடமாக இருக்கட்டும்.