Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் ஊழியர் திடீர் மரணம் - காரணம் என்ன?


Murugan| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:45 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஊழியராக பணிபுரிந்த ஒருவர்  மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கும், அந்த நிகழ்ச்சிக்கு பின்னால் பல ஊழியர்கள் இரவும், பகலுமாக கண் விழித்து வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது.
 
சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் போடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் பிளம்பராக பணியாற்றி வந்த இப்ராஹிம் ஷேக் என்பது இன்று திடீரென உயிர் இழந்தார் எனவும், அவர் மும்பையை சேர்ந்தவர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. வலிப்பு நோயால் அவருகு உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :