திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (11:22 IST)

சென்னை போலீசாருக்கு மீண்டும் வருகிறது சைக்கிள் ரோந்து : ஜெயலலிதா துவங்கி வைத்தார்

போலீஸ் ஜீப் நுழைய முடியாத சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து போலீசர் குற்றவாளிகளை கண்கானிக்க உதவியாக சைக்கிளில் ரோந்து செல்லும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்துள்ளார்.


 

 
இந்த திட்டம் இதற்கு முன் வழக்கத்தில் இருந்த ஒன்றுதான். கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் போலீசார் சைக்கிளில் ரோந்து சுற்றி வந்தனர். லத்தி, டார்ச் லைட் மற்றும் விசில் உடன் அவர்கள் சைக்கிளில் வலம் வருவார்கள். இரவு நேரங்களில் விசில் ஊதிக் கொண்டே ரோந்து வருவார்கள். இதனால், குற்றங்களில் எண்னைக்கை குறைவாக இருந்தது.
 
காலம் செல்ல செல்ல மோட்டார் சைக்கிள், ஜீப், இன்னோவா  கார் என்று போலீசாரின் வாகனங்கள் மாறியது. ஆனால், சென்னை போன்ற நகரங்களில், போக்குவரத்து நெரிசலை தாண்டி விரைவாக ஒரு இடத்திற்கு செல்ல போலீஸ் ஜீப் ஒத்துவரவில்லை எனத் தெரிகிறது.
 
இதனால், குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டதாகவும், குற்றங்கள் நடந்த இடத்திற்கு போலீசார் தாமதமாக செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரிய வாகனங்கள் நுழைந்து செல்ல முடியாத சிறு தெருக்கள் மற்றும் சந்து பொந்துகளில், சைக்கிள் மூலம் எளிதாக செல்லலாம் என்பதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய காவல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் 3 சைக்கிள் வீதம், சென்னை போலீசாருக்கு மொத்தம் 200 சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிளும் வழங்கப்பட்டன
 
பாதசாரிகளை எச்சரிக்கும் வகையில், அந்த சைக்கிளில் மைக் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இது போலீசாருக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். 
 
சென்னை தலைமை செயலகத்தில் காலை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.