Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது: பொங்கும் சீமான்!

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது: பொங்கும் சீமான்!


Caston| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (16:31 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

 
 
இது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விருதுகள் மீது எனக்கு மதிப்பு கிடையாது, இந்த நாட்டிற்காக தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்து செக்கிழுத்து இறந்த வஉ சிதம்பரனாருக்கு கிடைக்காத பாரத் ரத்னா விருது மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
 
மேலும் தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என கூறிய முத்துராமலிங்கத் தேவருக்கு கிடைக்காத பாரத ரத்னா விருது, இது போன்று எண்ணற்ற தியாக பெருமக்களுக்கு எல்லாம் கிடைக்காத விருது, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கிடைக்கும் போது அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு மதிப்பு இல்லை என்றார்.
 
தலை சிறந்த தியாகிகளுக்கு கொடுக்காத இந்த விருதுக்கு நான் ஏன் மதிப்பு தர வேண்டும். அது யாருக்கு சென்றால் என்ன, கொடுத்தால் என்ன, கொடுக்கவில்லை என்றால் என்ன என கூறிய அவர், அவர்கள் விருப்பு வெறுப்புக்காக விருது கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :