1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (15:17 IST)

புதுக்கோட்டையில் பீர் குடிக்கும் போட்டி.. வாந்தி எடுத்தால் நீக்கம்.. நுழைவுக்கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Beer
புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
புதுக்கோட்டை மாவட்டம் குறம்மக்குடி தாலுகாவில் உள்ள வாணக்கன்காடு  என்ற ஊராட்சி பகுதியில் பீர் குடிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒரு நபர் பத்து பீர் குடிக்க வேண்டும் என்றும் சைடிஷ் ஆக மீன் வருவல் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த போட்டியின் நுழைவு கட்டணம் ஆயிரம் ரூபாய் என்றும் 36 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றும் பீர் குடித்துக் கொண்டிருக்கும் போது வாந்தி எடுத்தாலோ, உமட்டுதல் வந்தால் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுபவர் பீருக்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். முதல் பரிசு 5000 ரூபாய் என்றும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran