திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 28 மே 2017 (21:55 IST)

மாட்டு இறைச்சி தடை எதிரொலி: தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
இந்தியாவிலேயே முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தான் தோல் உற்பத்தி கூடங்கள் தொடங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
 
தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 37 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் இருந்து தான் செல்கிறது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை மூடினால் திரும்பவும், அதை திறக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.