1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (17:27 IST)

மக்களே உஷார் - இடி, மின்னல், மழைக்கு வாய்ப்பு

மக்களே உஷார் - இடி, மின்னல், மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணி நேரத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்.
 
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை காரணமாக தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.