வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (14:08 IST)

புதிய ஆளுநர் ஆதரவு யாருக்கு?: முந்திக்கொண்ட தினகரன் தரப்பு!

புதிய ஆளுநர் ஆதரவு யாருக்கு?: முந்திக்கொண்ட தினகரன் தரப்பு!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பணியாற்றிய வித்யாசாகர் ராவ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய முழு நேர ஆளுராக நியமிகப்பட்டார் பன்வாரிலால் புரோஹித்.


 
 
அவருக்கு நாளை காலை 9.30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி. இந்நிலையில் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் யாருடைய ஆதரவாளர் என்ற அலசலை ஆரம்பித்துவிட்டனர் தமிழக ஆளும் தரப்பினர்.
 
இந்த அலசலில் தினகரன் தரப்பு முந்திக்கொண்டதாக கூறப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனை அறிந்த தினகரன் தரப்பு ஏற்கனவே ராஜ்நாத் சிங்கிடம் பேசிவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் புதிய ஆளுநர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்கு உடன்பட மாட்டார் என தினகரன் ஆதரவாளர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.