1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:59 IST)

பஞ்சாப் கவர்னராகும் பன்வாரிலால் புரோஹித்? தமிழக கவர்னர் மாற்றமா?

தமிழகத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து விரைவில் தமிழக கவர்னர் மாற்றப்படுவார் என்றும் புதிய கவர்னர் நியமனம் செய்யப்படுவர் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தமிழக கவர்னராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முறைப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சட்டீஸ்கர் மாநிலத்தின் கூடுதல் பொறுப்பாளராகவும் அவர் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கவர்னர் பதவியில் இருந்து அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்றும் தமிழக கவர்னராக வேறு ஒரு நபர் புதிதாக நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த எ.கணேசன் மேகாலயா கவர்னராக நியமனம் செய்யப்பட்டார் என்பதும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழகத்தின் கவர்னராகவும் தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்