வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 அக்டோபர் 2019 (15:36 IST)

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி !

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கியுள்ள மாணவன் உதித் சூர்யாவின் தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றி வந்த வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அந்த மருத்துவ கல்லூரி டீன் அளித்த புகாரின் பேரில்  போலிஸார் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் நடந்த விசாரணையில் மேலும் சிலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை மீண்டும் சிபிசிஐடி காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.