வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (17:10 IST)

பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது

2015-16 ஆம் ஆண்டு பி.எட் படிப்பதற்க்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. விண்ணப்பம் பெற கடைசி தேதி இம்மாதம் 10 ஆம் தேதியாகும். கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 10 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பி.எட்  படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தனி வரிசையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தனி வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு பி.எட் படிப்பிற்கு பொறியியல் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால். விண்ணப்ப விநியோகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8000 விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன, தேவைபடும் பட்சத்தில் கூடுதல் விண்ணப்பங்கள்  அச்சடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.